சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை பதிவு
சென்னை உயர்நீதி மன்றத்தில் நாமக்கல் மாவட்ட சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் வள்ளல் தெரு என்று சாதி பெயர் இடம் பெற்றிருந்ததை காரணம் காட்டி ஒரு தெரு அல்லது சாலைக்கு சாதி பெயர் வைப்பதால் அங்கு வாழும் மக்கள் ஜாதியால் அடையாளம் காணப்படுகிறார்கள் என்றும் இதனால் அவர்களின் குடும்ப அட்டை ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் போன்ற அரசு ஆவணங்களிலும் அந்த ஜாதி பெயர்கள் இடம் பெற்று விடுகின்றன என்றும் சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெரும் தடையாக இவை மாறி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் ஆதிதிராவிட நலத்துறையில் சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றம் செய்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு சாதிப் பெயர்களை நீக்குவது தான் முழுமையான சமூக நீதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
Tags :


















