இளைஞர் மீது இளம் பெண் ஆசிட் வீச்சு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர் மீது ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. குண்டூர் நல்லபாடு ஸ்ரீனிவாஸ்நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் மீது கம்மத்தை சேர்ந்த ராதா என்ற இளம்பெண் ஆசிட் ஊற்றினார். பலத்த காயமடைந்த வெங்கடேஷ் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் காதல் விவகாரமே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிகிறது. இது குறித்த முழுத் தகவல் தெரயவரவில்லை. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :