சத்யராஜ் பிறந்தநாள் - சீமான் வாழ்த்து

by Staff / 03-10-2023 04:31:45pm
சத்யராஜ் பிறந்தநாள் - சீமான் வாழ்த்து

தமிழ் சினிமாவில் நக்கல், நையாண்டி, வில்லத்தனம், ஹீரோயிசம் என ஒரு பேக்கேஜாக ரசிகர்களை ஈர்த்து தனித்துவமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சத்யராஜ் (Sathyaraj) இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர் பக்கம் நின்று உரிமைக்குரல் எழுப்பும் இன உணர்வும், மான உணர்வும் கொண்ட புரட்சித்தமிழன் அன்பிற்கினிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via