திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநில ம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநில ம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் நிலவும் உள்நாட்டு மற்றும் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கையாள மத்திய அரசு தவறிவிட்டதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது வளைகுடா நாடுகளில் நிலவும் மோதல் காரணமாக உலகளாவிய விநியோக சங்கிலி பாதிக்கப்பட்ட போதிலும் போதிய கையிருப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது என மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் முன்னெடுத்தன.. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமைச்சர்கள் கே ஏ என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி என தமிழக முழுவதும் சட்டமன்ற பாராளுமன்ற மாவட்ட செயலாளர்கள் தமிழ் தலைமையில் நிகழ்ந்தன.
Tags :


















