குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற விருந்து தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்ட தேர்வு மாற்றுத் தேதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது. காலை தாள் -1 கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும் மதியம் பொது அறிவு மற்றும் திறனறி தேர்வு தாள் -2 நடந்தது இந்த தேர்வு மூலம் சுமார் 645 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வுகள் இந்த முதன்மை தேர்வில் கலந்து கொண்டனர்.
Tags :


















