தமிழகத்தில் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மழை..

by Editor / 18-03-2023 08:03:28am
 தமிழகத்தில் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மழை..

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி..மின்னலொடு கனமழை பெய்தது.மின்னல்தாக்குதலில் தென்காசி மாவட்டத்தில் 2 தென்னைமரங்கள் தீப்பற்றி எரிந்தது.

 தமிழகத்தில் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மழை..
 

Tags :

Share via

More stories