தேர்தல் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவோம்- முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கம் 

by Editor / 18-03-2023 07:50:25am
தேர்தல் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவோம்- முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கம் 


பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நகைச்சுவையாக இருக்கிறது என்றும் இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் -ஓ.பி.எஸ். ஆதரவாளர் முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவதற்கான தேதி நாளை மறுநாள் முடிவடைகிறது.

அதாவது வரும் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் தேர்தல் நடத்துவது சட்டப்படி செல்லாது என ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ளார்.அந்தபேட்டியில் கூறியதாவது , தேர்தல் நடத்துவது சட்டப்படி செல்லாது.மோசடி அரசியல் செய்ய இவர்கள் தேர்தலை அறிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்மானங்கள் விஷயம் தொடர்பாக நாங்கள் தலையிடுவதில்லை என்று சொல்லியிருக்கிறது.இந்த நிலையில் இவர்கள் தேர்தல் நடத்துவது சட்டத்திற்கு விரோதமானது. இந்த தேர்தல் செல்லாது. தேர்தல் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via