கருணாநிதி நினைவு தினம் - நாடாளுமன்றத்தில் மரியாதை

by Staff / 07-08-2023 12:28:53pm
கருணாநிதி நினைவு தினம் - நாடாளுமன்றத்தில் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி, கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை ஓமந்தூரார் வளாகம் முதல் அண்ணா சதுக்கத்தில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo