முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்
சொத்து குவிப்பு வழக்கில் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஜயபாஸ்கர், அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த மே 22ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 126 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
Tags :