திருச்சூர் கோவிலுக்கு தங்க யானை காணிக்கை அளித்த பக்தர்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்குநாதன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் தான் திருச்சூர் பூரம் விழா நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இக்கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் இங்கு நடைபெறும் யானைகள் ஊர்வலத்தை கண்டு வியப்படைந்தார்.
இதையடுத்து கோவிலுக்கு தங்க யானை ஒன்றை காணிக்கை செலுத்த விரும்பினார். நேற்று வடக்கு நாதன் கோவிலுக்கு சென்ற அந்த பக்தர் கோவிலுக்கு தங்க யானை ஒன்றை காணிக்கையாக வழங்கினார். அந்த தங்க யானை 800 கிராமில் செய்யப்பட்டிருந்தது.
காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க யானை வடக்கு நாதன் கோவில் தந்திரி புளியன்னூர் சங்கர நாராயணன் நம்பூதிரி தலைமையில் கோவிலில் நிறுவப்பட்டது.
மேலும் அந்த பக்தர் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கையும் வழங்கினார். தங்க யானை மற்றும் ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய பக்தர் தனது பெயர் விபரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
Tags :