தென்காசி அருகே தாய் மற்றும் பிளஸ் டூமாணவி தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 24-09-2024 09:40:09am
தென்காசி அருகே தாய் மற்றும் பிளஸ் டூமாணவி தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் வடக்கு சன்னதி பஜாரில் கடை நடத்தி வருபவர் பரசுராமன் இவர் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் தனது மனைவி ஜெயா (45) மற்றும் அருந்ததியுடன் (17) குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு ஜெயா மற்றும் அவரது 12 வது வகுப்பு படித்து வரும் மகள் அருந்ததி இருவரும் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலையின் காரணம் கடன் தொல்லையா இல்லை குடும்ப பிரச்சினையா என்ற கோணத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : தென்காசி அருகே தாய் மற்றும் பிளஸ் டூமாணவி தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை....

Share via

More stories