திமுக கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி .

திமுக கூட்டணியில் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதில் உரசல் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (அக்.12) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் அதிக இடங்கள் வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சிகள் கேட்க தொடங்கிவிட்டன. இதனால், திமுக கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், தேர்தல் அறிவிப்புக்கு பிறகும்கூட இந்த கூட்டணியில் மாற்றங்கள் வரக்கூடும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Tags : திமுக கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி .