அவதூறான கருத்துகளை பரப்பியதவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் கைது.
தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார், அவதூறுப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து தனது முகநூல் (Facebook) பக்கத்தில் அவதூறான கருத்துகளை பரப்பியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிர்மல் குமாரை கைது செய்துள்ளனர்.
Tags : அவதூறான கருத்துகளை பரப்பியதவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் கைது


















