மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சந்திப்பு
.தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய பொழுது தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலினின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதியை அழுத்த முதலமைச்சராக்குவது தான் என்று அமித்ஷா குற்றம் சாட்டியதோடு, முதலில் கருணாநிதி பிறகு ஸ்டாலின் இப்போது உதயநிதி இந்த கனவு ஒருபோதும் நனவாகாது என்று அவர் கூறியதோடு ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தியாவிலேயே மிகவும் அதிக ஊழல் உள்ள ஆட்சி என்றால் அது தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி தான் என்றும் இங்கே 20 சதவீத கமிஷன் முறை நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அரசு ஊழியர்கள் உரிமைக்காக தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு ஆட்சி மோசமடைந்துள்ளதாகும் குறிப்பிட்டார் 2026 தேர்தல் இலக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் கூட்டம் முடிந்து திருச்சியில் தங்கி உள்ள அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் அதிமுகவின் முக்கிய முகமாக திகழும் எஸ்.பி. வேலுமணி சந்தித்து வரும் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய விஷயங்கள் குறித்தும் தொகுதி பங்கீடு சம்பந்தமாகவும் பேசப்பட்டதாக தகவல்.
Tags :



















