திமுக பிரசன்னாவின் மனைவி தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை.!
.jpg)
சென்னையில் உள்ள வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுகவின் செய்திதொடர்பாளாக இருந்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், இன்று திடீரென பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பிரசன்னாவின் மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிரசன்னாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று மனைவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. பிரசன்னா ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தது, பல விடியோக்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags :