உக்ரைன் அதிபர் மாளிகையில் உருவாக்கப்பட்ட பாடல்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாளிகையில் படமாக்கப்பட்டது என நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார். உக்ரைனில் தாக்குதல் மற்றும் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் இந்த பாட்டை உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் மாளிகையில் படமாக்கினோம். இப்பாடல் மூலம் உக்ரைனுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அழகான இடம், அழகான மனிதர்கள் என அழகான அனுபவங்களில் ஒன்றாக உக்ரைன் பயணம் இருந்தது. இந்தியா வந்த பிறகு மீண்டும் உக்ரைன் செல்ல திட்டமிட்டேன் ஆனால் அது முடியவில்லை என்றார்.
Tags :