உலகத்தை அஜித் ஒருமுறை சுற்றி வந்த பிறகுதான் விடா முயற்சி படப்பிடிப்பு நடக்கும்.
அஜித்- விஜய் வளருகிற காலகட்டத்தில் இருந்து இரு ரசிகர்களும் தலயா ?தளபதியா? என்று அடித்துக் கொண்டு திரையரங்கில் அவர் படத்தை அமோகமாக ஓட்டி கோடிகளை குறிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள். அந்த ரசிகர்கள் இந்த ஆண்டு இருவருடைய படங்களும் ஒன்றாக வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், விஜய்- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் லியோ படத்திலும் அஜித் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் படமான விடாமுயற்சியிலும் நடித்து இரண்டுபோ் படங்களும் நேருக்கு நேராக மோதும் என்கிற நிலை இருந்தது .அஜித்தின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்ததற்கு பின்னால் நடந்த அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக அவர் நீக்கப்பட்டு படம் எடுக்கப்படுமா? எடுக்கப்படாத? என்கிற நிலையில் இழு பறிக்கு இடையில் ஒரு வழியாக விடா முயற்சி படம் வெளிவரும் என்கிற நிலை இருந்தது. ஆனால் ,லைக்கா ப்ரொடக்ஷன் மீது நடந்த வருமான வரி சோதனை ,அந்த படம் வெளிவராமல் இதுவரை முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுது படப்பிடிப்பிற்கு செல்வார்கள் என்கிறதும் கேள்விக்குறியாக இருக்கிறது .இன்று அறிவிப்பு வரும் நாளை அறிவிப்பு வரும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்ததெல்லாம் ஏமாற்றமாகவே நீண்டு கொண்டிருக்கிறது. தனித்தனியாக இருவருடைய படங்கள் வெளிவரும் பொழுது இரண்டு ரசிகர்களுக்குள்ளே ஒரு ஆத்திரமும் ஒரு கோபமும் இயல்பாக முளைப்பதை நாம் பல்வேறு கட்டங்களில் பார்த்திருக்கிறோம் .தன்னுடைய தலைவன் படம் வரவில்லையே என்ற ஏக்கமும், வந்த படத்தைப் பற்றிய தரக்குறைவான விமர்சனங்களையும் மாறி மாறி ரசிகர்களிடமிருந்து வெளிவருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், விஜயினுடைய லியோ அக்டோபர் மாதத்தில் வெளிவர இருப்பதால், அஜித்தின் உடைய ரசிகர்கள் ஏமாற்றத்திலே இருப்பர் .விடாமுயற்சியோடு, உலகத்தை அஜித் ஒருமுறை சுற்றி வந்த பிறகுதான் விடா முயற்சி படப்பிடிப்பு நடக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Tags :



















