அண்ணாமலை இன்று டெல்லிப்பயணம். 

by Editor / 01-10-2023 08:11:00am
அண்ணாமலை இன்று டெல்லிப்பயணம். 

அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக்.01) டெல்லி செல்கிறார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். இந்த சந்திப்பில், பாஜக தலைமையில் கூட்டணியில் இருந்த  அதிமுக விலக்கியநிலையில் தமிழகத்தில் புதியதாக வலுவான கூட்டணி அமைப்பது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும்  விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை  எதிர்நோக்கியுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியநிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

 

Tags : அண்ணாமலை இன்று டெல்லிப்பயணம். 

Share via