2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.,4ல் தேர்தல்

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அதிமுக.,வை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். இதனையடுத்து, தனது ராஜ்யசபா எம்.பி., பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இதனால், காலியாக அறிவிக்கப்பட்ட இந்த இரு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.,15ல் துவங்கி செப்.,22ல் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.,23ல் வேட்புமனு பரிசீலனை, செப்.,27ல் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. அக்.,4ல் நடைபெறும் ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு துவங்கி, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கையும் அதே தேதியில் (அக்.,4) நடைபெறும்.
Tags :