2. 55கோடி செலவில் மாணவர்களுக்கு சீருடை..

by Staff / 01-05-2023 05:25:23pm
 2. 55கோடி செலவில் மாணவர்களுக்கு சீருடை..

சென்னை மாநகராட்சியின் கீழ் தொடக்க, நடுநிலைப், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 29, 132 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸில் சீருடை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சீருடை வழங்கப்படுவது வழக்கம்.

 

Tags :

Share via