திருநெல்வேலி தகராறை தட்டி கேட்ட காவலருக்கு அரிவாள் வெட்டு.

திருநெல்வேலி மேலப்பாளையம் அத்தியூட்டு தெருவைச் சேர்ந்தவர் அக்பர் அலி.இவரது மகன் முகமது ரஹ்மத்துல்லா(27).இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியன் காவலராக பணிபுரிந்து வந்தார், தற்போது திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலராக இருக்கிறார் .இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அச்சமயம் அங்கே இருந்த வாலிபர்கள் சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தனராம். பொது இடத்தில் இவ்வாறு தகராறுகளில் ஈடுபடுகிறீர்களே என காவலர் முகமது ரஹ்மத்துல்லாஹ் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரஹ்மத்துல்லாவை தாக்கியுள்ளார். இதில் அவரது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விட்டுச்சென்ற செல்போனை கைப்பற்றி, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் மாநகராட்சி பூங்காவில் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : திருநெல்வேலி தகராறை தட்டி கேட்ட காவலருக்கு அரிவாள் வெட்டு