கலப்பு காதல் திருமணம் செய்த பெண்ணால் 40 பேருக்கு மொட்டை.

ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டம், காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தில் உள்ள பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண், மாற்று சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், இருவரும் திருமணம் செய்து வேறு கிராமத்திற்கு சென்று விட்டனர்.இந்த திருமணம் குறித்து தகவலறிந்த அந்த பெண்ணின் கிராமத்தினர், இதனை அவமானமாக கருதி, அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 40 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.அதன் பின்னர், மீண்டும் கிராமத்திற்குள் சேர்க்க வேண்டும் என்றால், சுத்திகரிப்பு சடங்கைச் செய்ய வேண்டும் என கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கிராமத்து கோவில் முன்பு , கால்நடைகள் பலியிடப்பட்டு அந்த குடும்பத்தை சேர்ந்த 40 பெரும் மொட்டையடிக்கப்பட்டனர்.இதன் பின்னர், அந்த குடும்பத்தினர் கிராமத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.40 பேர் மொட்டையடிக்கப்பட்ட நிலையில், வயல்வெளியில் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக, அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Tags : கலப்பு காதல் திருமணம் செய்த பெண்ணால் 40 பேருக்கு மொட்டை.