சந்திரயான்-4 திட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன- புதியதலைவர் டாக்டர். வி.நாராயணன்.
ககன்யான் மற்றும் சந்திரயான்-4 திட்டங்களுக்கு இஸ்ரோ முன்னுரிமை அளிக்கும் என்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் டாக்டர். வி.நாராயணன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-4 திட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிப்பதே குறிக்கோள். ஜி.எஸ்.எல்.வி மார்க் II நேவிகேஷன் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்.
Tags : டாக்டர். வி.நாராயணன்.