குழித்துறை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

by Staff / 08-08-2024 01:20:24pm
குழித்துறை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பிற அரசுத் துறையிலும் பணி புரியும் பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறான கருத்தைத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கோவை சைபர் கிரைம் போலீசார் பெண் போலீசாரை பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில் சென்னை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதனிடையே சவுக்கு சங்கர் பெண் காவலர்களையும் பெண் உதவி ஆய்வாளர்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி புகாரின் பெயரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சவுக்கு சங்கர் இன்று அதிகாலை நாகர்கோவில் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் அங்கிருந்து காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழித்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கர் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் போடப்பட்டிருந்தனர்.

 

Tags :

Share via