ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஜாமின் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மீது நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இரு தரப்பு மீதான வாதங்களும் முடிவடைந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கடந்த 23ஆம் தேதியும், கிருஷ்ணா 26ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இவர்களின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :