இக்கட்டில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டியுள்ளது பழனிசாமி தான். பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டு பிரச்சாரம் எதற்கு? என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக மக்களை சந்திக்க பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளது. இன்று (ஜூலை 7) முதல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக அமைச்சர் துரைமுருகன் மேற்கூறிய தனது பதிலை தெரிவித்துள்ளார்.
Tags :



















