முதல்வர் அல்வா கடை.. அண்ணாமலை பரபரப்பு பதிவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி அல்வாவை ருசித்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?" என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
Tags :