நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கும் தென்காசி தொகுதி

by Staff / 22-03-2024 12:33:18pm
நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கும் தென்காசி தொகுதி

மக்களவை தேர்தலில் அனைத்து கூட்டணிகளும் தொகுதிகளை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தென்காசி (தனி) தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த தொகுதியில்
திமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி சார்பில் தமமுக கட்சி தலைவர் ஜான் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். அதே போல் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories