உச்ச நீதிமன்ற கண்டனத்திற்கு பணிந்தார் ஆளுநர் ரவி பொன்முடிக்கு இன்று பதவிப் பிரமாணம்

பொன்முடிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் ரவிக்கு ஒரு நாள் கெடு விதித்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற கண்டனத்தை அடுத்து பொன்முடி பதவியேற்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. அதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 3.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இன்றைக்குள் பதவிப் பிரமாணம் செய்து வைக்காவிட்டால் கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் ஆளுநரை எச்சரித்திருந்தது.
Tags :