பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி வீட்டில் சோதனை

by Staff / 20-02-2024 01:26:21pm
பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி வீட்டில் சோதனை

சினேகம் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகரும், சீரியல் நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சினேகம் அறக்கட்டளை என்ற பெயரில் ஜெயலட்சுமி பண மோசடி செய்ததாக பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே போல், தன் மீது அவதூறு பரப்பியதாக, சினேகன் மீது ஜெயலட்சுமி, திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செயப்பட்டுள்ள வழக்கும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

 

Tags :

Share via