முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து படியே தனது அன்றாட அரசு பணியை மேற்கொண்டு வருகிறார்.

by Admin / 23-07-2025 07:52:57am
முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து படியே தனது அன்றாட அரசு பணியை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நடைபெற்ற பொழுது லேசான தலைசுற்றலின் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்ய வேண்டிய நிலையில் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு காரில் முன் இருக்கையில் அமர்ந்தபடியே சென்று பல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் இன்னும் மூன்று நாட்கள் மருத்துவ ஓய்வில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல். முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து படியே தனது அன்றாட அரசு பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via