தமிழக கேரளா எல்லையில் அதிகரிக்கும் கேரளா வாகனங்கள் 

by Editor / 07-11-2021 02:52:26pm
தமிழக கேரளா எல்லையில் அதிகரிக்கும் கேரளா வாகனங்கள் 

 

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிகரித்து வரும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் வரை பெய்த கனமழையால்  பகுதிகள் சேதமடைந்தன.இந்த மழையின் காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது பகுதிகளில் இருந்து தமிழக நோக்கியும் உறவினர்கள் இருக்கும் பகுதிக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.


தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகை காரணமாக தமிழகத்தில் தொழில் செய்து வரும் ஏராளமான கேரளமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு தர்போது அவர்கள் தமிழகம் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக  தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்துள்ள கொரோனா கண்காணிப்பு சோதனைச்சாவடி பகுதியில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏராளமான வாகனங்களில் வருபவர்கள் முறையான ஆர்டிபிசிஆர். சோதனை சான்றிதழ் மற்றும் இரண்டு கட்ட தடுப்பூசிகள் செலுத்தாமல் வருவதன் காரணமாக அவர்கள் சுகாதாரத்துறையினரால் காவல்துறையினர் உதவியோடு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.மேலும் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை அரசு பேரூந்துக்களிலும் அதிகரித்துள்ளது.கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு  புளியரை கொரோனா சோதனைச்சாவடியில் ஆர்டிபிசிஆர்  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via