கனமழையினால் தற்காலிக பாலம் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு. 

by Editor / 02-03-2025 11:24:56am
கனமழையினால் தற்காலிக பாலம் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு. 

ஸ்ரீவைகுண்டம் அருகே ஒருநாள் மழையில் பாலம் அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இடிந்து விழுந்தது. போக்குவரத்து துண்டிப்பு. கிராம மக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு. இரவு முதல் பெய்த மழையால் சாலையைத் தாண்டி செல்லும் மழை நீர்.* 

தூத்துக்குடி மாவட்டம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று காலை வரை பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்குளம், செய்துங்கநல்லூர், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தொடர் மழையின் காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள சத்தக்காரன் பட்டியில் பாலம் அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட தற்காலிகமாக பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

 

Tags : கனமழையினால் தற்காலிக பாலம் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு. 

Share via