எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் நீடிப்பதாக தகவல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா? சட்டசபையில் இபிஎஸ் அருகில் இருக்கும் இருக்கையில் ஓபிஎஸ் அமர முடியுமா என்ற பல கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கை மாற்றப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதேபோன்று, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சி துணைத்தலைவராக நீடிப்பதாக தெரிவிக்கின்றனர்.
Tags :