திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

by Staff / 29-01-2023 03:45:27pm
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டிய விவகாராங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு வலியுறுத்த திமுக முடிவு செய்துள்ளது. மேலும் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து வெளியான ஆய்வறிக்கை, குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories