ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு
ஆபாசமாக பேசி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருவதாக ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்.எம்.கே.முகைதீன் என்பவர் அண்மையில் புகார் அளித்தார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஆபாச வீடியோ பதிவு செய்து அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். இதனால் அவர்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் பலரும் ரவுடி பேபி சூர்யா உள்பட 4 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்தசூழலில் இந்த புகார் தொடர்பான வழக்கு இன்று திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனல் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Tags :