தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. அருணா ஜெகதீசன் ஆணைய பணி மேலும் 6 மாதம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது தமிழக அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்... அதன் 100வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.. அதேன்படி தூத்துக்குடி வந்து விசாரணையை நடத்தி வருகிறார் அருணா ஜெகதீசன்.. துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களில் ஆய்வு, பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டார்.
பிறகு, பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யபட்டது... கடந்த மே மாதம்கூட, அருணா ஜெகதீசன், முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வரை ஆறுமாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சமபவத்தை விசாரிக்கும் இந்த ஆணையம் தான் ரஜினியையும் விசாரணைக்கு அழைத்தது... ஆனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கப்பட்டது.. அதேசமயம் எழுத்து பூர்வமாக ரஜினி ஒரு விளக்கமும் அறிக்கையாக தந்திருந்தார்.. ஆனால் அதில் சில சந்தேகம் உள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது.
Tags :



















