தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு

by Editor / 15-02-2022 09:44:40pm
தமிழகத்தில்  9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறதுதமிழகத்தில் திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது

 

Tags : Chance of light to moderate rain in 9 districts of Tamil Nadu

Share via