60 நாட்கள் எப்படி இருக்கும்...
உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான தீர்க்கதரிசனங்கள் ( The Centuries) என்பதில் கவிதை வடிவில் எழுதி வைத்து உள்ளார்.465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்றாம் உலகப் போர், அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது, லண்டன் தீ விபத்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணம் என்று பல நூறு விஷயங்களை இவர் துல்லியமாக கணித்து இருக்கிறார்.
இப்படி 2022ல் நடக்க போகும் விஷயங்களையும் இவர் கணித்துள்ளார். அதன்படி 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்கும். தீ பிளம்பு போன்ற.. முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கல் பூமியை தாக்கும். இதனால் பெரும் சேதங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் ஆண்டு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும். பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும். அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும். அப்போது, உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்றுவிடும். மூன்று நாட்களுக்குப் பிறகு, உலகம் வெளிச்சத்தைக் காணும்போது, நவீனத்துவம் முடிந்துபோய், மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும் என கணித்துள்ளார்.
Tags :