மாவட்ட ஆட்சியரை தனியாக வந்து நேரில் சந்தித்து நகராட்சி சுகாதார கேடு குறித்து புகார் அளித்த 9 ஆம் வகுப்பு மாணவன்.

by Editor / 07-12-2024 06:10:47pm
மாவட்ட ஆட்சியரை தனியாக வந்து நேரில் சந்தித்து நகராட்சி சுகாதார கேடு குறித்து புகார் அளித்த 9 ஆம் வகுப்பு மாணவன்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காச நோய் விழிப்புணர்வு 100 நாள் பிரச்சார வாகன துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர் இதன் தொடர்ச்சியாக கொடி நாளை முன்னிட்டு ஊர்க்காவல் படை வீரர்கள் வசூலைமாவட்ட ஆட்சியர் கொடி நாள் நிதியாக 100 ரூபாய் வழங்கி கொடி நாள் வசூலை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அடுத்த நிகழ்ச்சிக்கு அவர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பொழுது சிறுவன் ஒருவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் என்றும் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை பஜார் பகுதியில் தான் வசித்து வருவதாகவும் தனது வீட்டுக்கு செல்லும் சாலை குறுகிய சாலையாக உள்ளதால் சுகாதாரக்கேடு நிரம்பி காணப்படுவதாகவும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்யாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்து மனு அளித்தார் என் தொடர்ச்சியாக மனுவை நின்று நிதானமாக படித்து பார்த்த மாவட்ட ஆட்சியர் சிறுவன் முதுகில் தட்டி கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இந்தச் சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பையும் அங்கு கூடிய இந்த பொதுமக்கள் மத்தியில் நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

Tags : மாவட்ட ஆட்சியரை தனியாக வந்து நேரில் சந்தித்து நகராட்சி சுகாதார கேடு குறித்து புகார் அளித்த 9 ஆம் வகுப்பு மாணவன்.

Share via