பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.

by Editor / 24-02-2024 02:09:19pm
 பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.

காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அரசியலில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், சட்டமன்ற தலைவர் பதவி வழங்காதது; கட்சியில் முக்கியத்துவம் வழங்காதது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் தற்போது இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் அவர் இணைந்துள்ளார். பிரதமரின் அயராத முயற்சியால் தமிழகம் வளர்ந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

 

Tags : பாஜகவில் இணைந்தார் விஜயதரணி..

Share via