ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. விசாரணையின்போது, அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் தமிழக அரசு இன்று பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா? என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முதல் இரண்டு நிமிடங்கள் மட்டும் கூட்டத்தினை புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதித்துவிட்டு. பத்திரிக்கையாளர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் அனுமதியின்றி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இறுதியாக இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்றே தெரிகிறது. கூட்டத்திற்கு பின்னரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :