ஒரே மாதத்தில் ரூ.1,650 குறைந்த தங்கம். ஆனாலும் ஷாக்

by Staff / 17-10-2022 11:52:16am
ஒரே மாதத்தில் ரூ.1,650 குறைந்த தங்கம். ஆனாலும் ஷாக்


கடந்த செப்டம்பர் 10-ம் தேதி ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்கம் ரூ.39,056-க்கு விற்ற நிலையில், கடந்த இரு நாட்களாக ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,656 குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை பிரியர்கள் குஷியில் இருந்தனர். இந்நிலையில் இன்று இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் லேசாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo