“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” ராகுல் காந்தி

by Staff / 23-08-2024 02:46:45pm
“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இப்படியான சம்பவங்கள் ஒரு சமூகமாக நாம் எங்கே போகிறோம் என்று சிந்திக்க வைக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து அரசுகளும், கட்சிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories