பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

by Editor / 10-06-2025 05:24:47pm
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு (42). தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டிலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. உறவினர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு இறந்து, அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபுவின் உறவினர் ஆலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via