என்.டி.ஏ  எந்த கெட்டப்பில்   வந்தாலும் அவர்களுக்கு கெட்அவுட்தான்.-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Admin / 27-01-2026 02:09:15am
 என்.டி.ஏ  எந்த கெட்டப்பில்   வந்தாலும் அவர்களுக்கு கெட்அவுட்தான்.-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதில் "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வெற்றியை வழங்கத் தயாராகிவிட்டனர்" என்றும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் "ஆரிய - திராவிடப் போர்க்களமாக" அமையும் என்றும்மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருக்கிறது. என்.டி.ஏ  எந்த கெட்டப்பில்   வந்தாலும் அவர்களுக்கு கெட்அவுட்தான்.

பெண்ணுரிமைக்கான ஆட்சியாக ,பெண்கள் கேட்காமலே அவங்களுக்கு  அவர்கள் தேவைகளை நிறைவேற்றுகிற ஆட்சி .பெண்கள் தான் ஒரு வீட்டின் பவர் ஹவுஸ். ஆண்கள் ஒரு வீட்டின் வாசல் வரைக்கும் தான் போக முடியும் பெண்கள் நினைத்தால் வீட்டில் உள்ள எந்த பகுதிக்கும் போக முடியும் ஏன் சமையல் கட்டு வரைக்கும் மட்டுமல்ல .அந்தப் பெண்ணின் மனசுக்குள்ள கூட போக முடியும். அதுதான் பெண்களுடைய பவர். பாரத பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு  அபாண்டமான பொய்ய சொல்லிட்டு போயிட் டுயிருக்காா்,ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிற இந்த மாநாட்டில் இருந்து சொல்கிறேன் இந்திய நாட்டிலே பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு தமிழ் நாட்டுல தான்  இருக்கு. அத நான் அடிச்சு சொல்கிறேன் என்றும்.மணிப்பூரில் ஏன் மகளிருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினாா்.

திமுக இந்த மகளிர் மாநாட்டை நடத்தி முடித்ததோடு அடுத்து வாரத்திற்கு ஐந்து மாநாடுகளை நடத்த இருக்கின்றது. அத்துடன் திருச்சியில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட திமுகவினர் கூடும் மிகப் பிரமாண்ட பொதுக் கூட்டத்தையும் நடத்த உள்ளது. தமிழ்நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் சூழலில் தன்னாட்சி மற்றும் மாநில உரிமைகளை முன்னிருத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது .இது வெறும் கூட்டணிகளுக்கு இடையிலான போட்டி மட்டுமில்லாமல் மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டக் களமாகவும் மாறி உள்ளது. திமுக தலைமையிலான  கூட்டணி கடந்த கால தேர்தல் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் மனநிலையை உருவாக்கவும் தீவிர பிரச்சாரங்களில் இறங்கியுள்ளது.

 

Tags :

Share via