திருமணமான 36 நாளில் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

ஜார்க்கண்ட்: கர்வா மாவட்டத்தில் திருமணமான 36வது நாளில் தனது கணவரை உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்தநாத் சிங் - சுனிதா (22) ஆகிய இருவருக்கும் மே 11 அன்று திருமணம் நடந்துள்ளது. முதல் நாளிலிருந்தே சுனிதாவிற்கு புத்தநாத்தை பிடிக்கவில்லை. இந்நிலையில், ஜூன் 15ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த கோழிக்கறியை கொடுத்து புத்தநாத்தை சுனிதா கொன்றுள்ளார். இதையடுத்து சுனிதாவை போலீசார் கைது செய்தனர்.
Tags :