பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும்.-அண்ணாமலை

by Editor / 28-10-2024 11:37:25pm
பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும்.-அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், “பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம். நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும். மத்தாப்புக்களின் வெளிச்சம்போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags : அண்ணாமலை

Share via