by Staff /
06-07-2023
03:30:43pm
சமீப காலமாக கார்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஷம்ஷாபாத் தொண்டுபள்ளி சுங்கச்சாவடியில் ஸ்விப்ட் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நொடிகளில் கார் முழுவதும் தீ பரவி எரிந்து நாசமானது. காரில் இருந்தவர்கள் தீயை பார்த்து கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :
Share via