பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இதய நோய் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 1950 இல் வெளிவந்த ஷாரு காரு தெலுங்கு படத்தின் மூலமாக சௌகார் என்கிற முன்னொட்டு பெயரை அடையாளமாக பெற்று தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ,இந்தி ஆகிய மொழிகளில் 400 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சௌகார் ஜானகி. தமிழில் புதிய பறவை, இரு கோடுகள் ,உயர்ந்த மனிதன் ,எதிர்நீச்சல் போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கி கௌரவ படுத்தியது. தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கி பெருமைப் படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, அவரது இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் விஜய், தமிழக முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்..
Tags :


















